ADDED : டிச 29, 2025 06:23 AM
சாத்துார்: சாத்துார் வடக்கு ரத வீதியில் தேமுதிக சார்பில் நிறுவன தலைவர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு நாள் குருபூஜை நடந்தது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் கருத்தப்பாண்டி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அந்தோனிராஜ் முன்னிலை வகித்தார். கணேசமூர்த்தி பேசினார்.கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* காரியாபட்டியில் நகர நிர்வாகிகள் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தகுமார், முருககுமார், நகரச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர்கள் ராமமூர்த்தி, ஹரிகேசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மாயக்கண்ணன், கண்ணன், சத்தியந்திரன், விவசாய அணி செயலாளர் சின்ன பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வடுகன், மாவட்ட பொருளாளர் பொம்மையன், மல்லாங்கிணர் நகரச் செயலாளர் முத்துமுனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

