/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அதிகாரி டிஸ்மிஸ்
/
பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அதிகாரி டிஸ்மிஸ்
பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அதிகாரி டிஸ்மிஸ்
பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அதிகாரி டிஸ்மிஸ்
ADDED : பிப் 15, 2024 09:11 PM
திருச்சுழி:அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார், 43, திருச்சுழி அருகே கணக்கி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருந்தார். இவர், 2018 - 19ல், கிராமத்தில் உள்ள தனியார் நிறுவன இடத்தை, முறைகேடாக பயிர் காப்பீடு பெறுவதற்கு கிராமத்தில் உள்ள ஒரு சிலருக்கு அந்த நிலத்தில் பயிர் செய்ததாக அடங்கல் கொடுத்தார்.
மேலும், தானும், தன் மனைவியும் விவசாயம் செய்ததாக அடங்கல் தயார் செய்து, பயிர் காப்பீடு தொகை, 7 லட்சம் ரூபாய் பெற்றார். விசாரணை செய்ததில், மோசடியாக 30 லட்சம் வரை பயிர் காப்பீடு பெற்றது தெரிந்தது.
இதையடுத்து, ஜெயக்குமாரை 'டிஸ்மிஸ்' செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளி கண்ணு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.