ADDED : நவ 28, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் நபார்டு வங்கி சார்பாக கிராமிய சந்தை திறப்பு விழா நடந்தது.
சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணைப் பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன், ஊராட்சித் தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த் கிராம சந்தையை திறந்து வைத்து பேசினார். சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், தனிநபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
விவசாயிகள், மக்கள், சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்.