/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டைக்கு வேண்டும் கட்டணமில்லா டவுன் பஸ்கள்; கிராம பெண்கள் எதிர்பார்ப்பு

ADDED : டிச 02, 2024 05:07 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து பெருமாள் தேவன்பட்டி, அட்டைமில் வழியாக வெம்பக்கோட்டைக்கு கட்டணமில்லா டவுன் பஸ்களை இயக்க வேண்டுமென வழித்தடத்தில் உள்ள கிராம பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கரிசல்குளம், பிள்ளையார்குளம், ராமச்சந்திரபுரம், கீழராஜகுலராமன், தொம்பகுளம் உட்பட பல்வேறு ஊராட்சிகள் ஆலங்குளம் வழியாக வெம்பக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் உள்ளது.
ஆனால், இவ்வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதற்கு போதிய அளவு கட்டணமில்லா டவுன் பஸ்கள் இல்லை. மக்கள் ராஜபாளையம் சுற்றி தான் வரவேண்டும்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாள் தேவன் பட்டி வழியாக பல டவுன் பஸ்கள் இயங்கினாலும் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கட்டணமில்லா பஸ்கள் சரிவர இயங்குவதில்லை.
இதனால் வழித்தடத்தில் உள்ள கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம், வெம்பக்கோட்டைக்கு கட்டணமில்லா டவுன் பஸ்களை இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.