/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மானுார் திட்ட குடிநீர் கிடைக்காததால் சாமிநத்தம் சுற்று கிராம மக்கள் அவதி
/
மானுார் திட்ட குடிநீர் கிடைக்காததால் சாமிநத்தம் சுற்று கிராம மக்கள் அவதி
மானுார் திட்ட குடிநீர் கிடைக்காததால் சாமிநத்தம் சுற்று கிராம மக்கள் அவதி
மானுார் திட்ட குடிநீர் கிடைக்காததால் சாமிநத்தம் சுற்று கிராம மக்கள் அவதி
ADDED : நவ 25, 2025 02:45 AM
சிவகாசி: சிவகாசி அருகே சிங்கம்பட்டியில் இருந்து சாமிநத்தத்தில் உள்ள நீரேற்றும் நிலையத்திற்கு இரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.
மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவிலில் இருந்து சிவகாசி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி சிங்கம்பட்டி, சாமி நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து சிங்கம்பட்டி நீரேற்றும் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. சிங்கம்பட்டியில் இருந்து சாமிநத்தம் சிவா நகரில் உள்ள நீரேற்றும் நிலையத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து சாமிநத்தம், புதுப்பட்டி அருணாச்சலபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் சிங்கம்பட்டியில் இருந்து இரு வாரத்திற்கும் மேலாக சாமி நத்தம் நீரேற்றும் நிலையத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இங்கிருந்து மற்ற கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். வேறு வழியின்றி இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக சாமிநத்தம் நீரேற்றும் நிலையத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

