/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழுதான மின்கம்பங்களை சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை
/
பழுதான மின்கம்பங்களை சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை
பழுதான மின்கம்பங்களை சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை
பழுதான மின்கம்பங்களை சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை
ADDED : மே 07, 2025 01:30 AM
மாவட்டத்தில் கிராமங்களுக்கு மின் கம்பங்கள் அமைத்து வீட்டுக்கு வீடு மின் இணைப்பு வழங்கி மின்வாரியம் மின் விநியோகம் செய்து வருகிறது.
நகர் புறங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி, சிறப்பு பராமரிப்பு பணி என பல்வேறு பராமரிப்புகளை செய்து வரும் மின்வாரியம் கிராமப்புற பகுதிகளில் பராமரிப்பு பணி செய்வதில் மெத்தனம் காட்டுகிறது, பல கிராமங்களில் போதுமான மின்கம்பங்கள் இல்லை.
மின்கம்பங்கள் அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பல கிராமங்களில் அவை மழைக்கு வெயிலுக்கும் சேதமடைந்து கிடக்கிறது.
இதனால் மின்தடை பிரச்னையால் நாள்தோறும் மக்கள் தவிக்கின்றனர். மின் கம்பங்களை சரி செய்ய, மின் கம்பிகளை உரசிச் செல்லும் மர கிளைகளை வெட்டுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை இழுத்து கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் மெத்தனமாக உள்ளனர்.
இதனால் மழைக்காலங்களில் பலத்த காற்று அடிக்கும் போது மின்கம்பங்கள் சாய்ந்தும், கம்பிகள் அறுபட்டும் போகின்றன. இவற்றை சரி செய்ய 2, 3 நாட்கள் ஆகிறது. அடிக்கடி மின் தடை பல மணி நேரம் ஏற்படுகிறது.
இதனால், விவசாயிகள், நடுத்தர, ஏழை மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதே போன்று நகராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான அருப்புக்கோட்டையில் நேதாஜி விரிவாக்க பகுதி, கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் இல்லை.
பல பகுதிகளில் எலும்பு கூடாக மின் கம்பங்கள் உள்ளன. காலநிலை பருவ நிலை மாற்றத்தால் தொடர் கனமழை, சூறாவளி அடிக்கிறது.
இவற்றை தாங்க கூடிய வகையில் மின் கம்பங்கள், மின் சாதனங்கள் இல்லை. கிராம பகுதிகளில் பழுதான மின் கம்பங்களை சரி செய்து, வலுவாக அமைக்க வேண்டும். கிராம பகுதிகளில் முறையான பராமரிப்பு பணிகளை செய்து, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

