/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சரிந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் கிராமத்தினர்
/
சரிந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் கிராமத்தினர்
சரிந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் கிராமத்தினர்
சரிந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் கிராமத்தினர்
ADDED : ஆக 07, 2025 11:17 PM

நரிக்குடி: நரிக்குடி சேந்தநதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் எப்போது விழுமோ என அச்சத்தில் மக்கள் நடமாடுகின்றனர்.
நரிக்குடி சேந்தநதியில் 40 ஆண்டுகளுக்கு முன் மின்சப்ளை செய்யப்பட்டது. மின்கம்பங்கள் சேதமடைந்து பழமையாகின. ஆங்காங்கே உடைந்து கம்பிகள் தெரிகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு முன் பலத்த காற்று வீசியதால் ஊருக்குள் இருந்த மின்கம்பம் உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது.
முற்றிலும் சாய்ந்து விடக்கூடாது என கருதி மரக்கட்டையை முட்டுக்கொடுத்து வைத்துள்ளனர். எப்போது உடைந்து விழுமோ என்கிற அச்சத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாடுகின்றனர்.
தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அவ்வப்போது பலத்த காற்று வீச கூடும். அப்போது மின் கம்பம் முற்றிலும் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மின் சப்ளை பாதிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. விபத்திற்கு முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.