/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு புகையால் கிராம மக்கள் அவதி
/
நகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு புகையால் கிராம மக்கள் அவதி
நகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு புகையால் கிராம மக்கள் அவதி
நகராட்சி குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு புகையால் கிராம மக்கள் அவதி
ADDED : ஜூலை 26, 2025 03:18 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து எரிப்பதால் கிளம்பும் புகை காற்றில் பரவி 4 க்கும் மேற்பட்ட கிராம மக்களை மூச்சு திணற வைக்கிறது.
அருப்புக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு சுக்கிலநத்தம் ரோட்டில் உள்ளது. நகரில் தினமும் சேரும் டன் கணக்கில் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மக்கும், மட்காத குப்பைகளாக தரம் பிரிக்க பிளான்ட் உள்ளது.
நகராட்சி குப்பை கிடங்கில் சேரும் குப்பைக்கு அடிக்கடி தீ வைக்கின்றனர். திறந்தவெளியில் குப்பை கிடங்குகளில் தீ வைத்து எரிக்க கூடாது என்ற சட்டம் இருந்தும் அதை நகராட்சி பின்பற்றுவதில்லை. குப்பை கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை, நச்சு வாயுக்கள் காற்று, நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. உடலில் சுவாச கோளாறு ஏற்படுத்துவதுடன் உடல் நல பிரச்னைகளும் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். குப்பைகளை எரிக்கும் போது மீதம் உள்ள சாம்பல் , பிற கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடும்.
அருப்புக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதிலிருந்து கிளம்பும் புகை அருகில் உள்ள சுக்கிலநத்தம், கஞ்சநாயக்கன்பட்டி, ராமசாமிபுரம் உள்ளிட்ட கிராம மக்களை பாதிக்கிறது. காற்றில் பறக்கும் புகையை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்க கூடாது என அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.