/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க.. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
/
தி.மு.க.. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
தி.மு.க.. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
தி.மு.க.. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு
ADDED : டிச 31, 2024 04:17 AM
சிவகாசி: தி.மு.க.. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டது ,என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசியில் மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க., ஆட்சியில் சிறுமிகள், மாணவிகள், முதியவர்கள் என அனைத்து பெண்களுக்கும் தி.மு.க., ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. இதனால் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.
இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தமிழகம் முழுவதிலும் உள்ள கல்லுாரி மாணவிகளுக்கு இந்த அரசு எப்படி பாதுகாப்பு அளிக்கும். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.
இதை பற்றி எல்லாம் கவலைப்படாத முதல்வர், அமைச்சர்களை வைத்து பதிலளிக்க வைக்கிறார். சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள முதல்வர் பதிலளிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.