/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சமச்சீர் கல்வி தாமதம் சரிக்கட்ட பள்ளிகளுக்கு புதிய காலண்டர்
/
சமச்சீர் கல்வி தாமதம் சரிக்கட்ட பள்ளிகளுக்கு புதிய காலண்டர்
சமச்சீர் கல்வி தாமதம் சரிக்கட்ட பள்ளிகளுக்கு புதிய காலண்டர்
சமச்சீர் கல்வி தாமதம் சரிக்கட்ட பள்ளிகளுக்கு புதிய காலண்டர்
ADDED : செப் 15, 2011 09:19 PM
விருதுநகர் : சமச்சீர் கல்வியால் தாமதம் ஏற்பட்ட நாட்களை சரிகட்ட, பள்ளிகளுக்கு புதிய காலண்டரை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
சமச்சீர் பாடதிட்டம் அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமத நாட்களை சரிகட்ட, பள்ளிகளுக்கு புதிய காலண்டரை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி வேலை நாட்கள் 224 .இதில் உள்ளூர் திருவிழா விடுமுறைகள் மூன்று , தேர்வுகள் நடத்த 24 நாட்கள் போக பள்ளி நாட்கள் 197 .ஆனால் தற்போது 183 வேலை நாட்கள் தான் உள்ளன. சமச்சீர் பாடத்திட்டம் தாமதத்தால் 60 நாட்களை கழித்தால், 123 நாட்கள்தான் வேலை நாட்களாக உள்ளது. 60 நாட்களை சரிகட்ட செப். முதல் ஏப். வரை மாதத்தில் இரண்டு சனிக்கிழமை வேலை நாட்களாகும். இதன் 17 நாட்களும் பள்ளி வேலை நாளாக்கப்பட்டுள்ளது. ஏப்.18 என்பதை ஏப் 28 வரை நீட்டித்து, இதன் 10 நாட்களும், காலாண்டு தேர்வு விடுமுறை 10 நாட்களில் 5 நாட்களை குறைத்து 5 நாட்கள் என , 32 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,தினம் 35 நிமிடம் பள்ளி வேலை நேரம் அதிகரிக்கப்படுகிறது. இதில் ,123 நாட்களில் 60 மணி நேரம் உள்ளது. இதன்படி ஒரு நாள் பள்ளி வேலை நேரம் 5.30 மணி நேரத்தை கணக்கிட்டால் 16 நாட்கள் வேலை நாட்களாகும்.இதன் மூலம் 48 நாட்கள் பள்ளி வேலை நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய காலண்டர் விபரத்தை , அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்க , முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.