/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., தாமிரபரணி நீரை சுத்தப்படுத்த ரூ.8.50 லட்சத்தில் சுத்திகரிப்பு மையம்

ADDED : ஆக 11, 2011 11:04 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தாமிரபரணி குடிநீரை சுத்திகரிக்க 8.50 லட்ச ரூபாய் செலவில் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த மார்சில் 29 கோடி ரூபாய் செலவில் வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நகராட்சிக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செண்பகதோப்பு பேயனாற்று குடிநீர் திட்டத்தின் மூலம் 20லட்ம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தாமிரபரணி தண்ணீரை சரி வர சுத்திகரிக்கப்படாததால் மக்களுக்கு காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டது. ஆனாலும் குடிநீர் தொட்டி அருகில் குளோரின் அதிக அளவும், கடைசி பகுதியில் குறைவாகவும் இருந்து வந்தது. இதனால் கடைசி பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நகராட்சி சார்பில் குடிநீரில் ஒரே அளவில் குளோரின் கலப்பதற்கு வசதியாக, சுத்திகரிப்பு மையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து, 8.50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை துவக்கி உள்ளனர்.