/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிறைவுற்றது ஆடி அமாவாசை வெறிச்சோடியது சதுரகிரி மலை
/
நிறைவுற்றது ஆடி அமாவாசை வெறிச்சோடியது சதுரகிரி மலை
நிறைவுற்றது ஆடி அமாவாசை வெறிச்சோடியது சதுரகிரி மலை
நிறைவுற்றது ஆடி அமாவாசை வெறிச்சோடியது சதுரகிரி மலை
ADDED : ஆக 02, 2011 11:24 PM
வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த ஆடி அமாவாசை விழா நேற்று முன்தினம் இரவுடன் முடிவுற்ற நிலையில், பக்தர்கள் அனைவரும் வெளியேறியதால் மலை வெறிச்சோடியது.
சித்தர் மலை என பக்தர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் ஜூலை 28 முதல் ஆடி அமாவாசை விழா தொடங்கியது. இதன் விழா நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி கோயில் வளாகங்களில் வைக்கப்பட்ட சிறப்பு உண்டியல்கள், கோயில் தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர் முன்னிலையில் திறக்கப்பட்டு ,மலையிலேயே எண்ணப்பட்டு , போலீஸ் பாதுகாப்புடன் இன்று கீழே கொண்டுவரப்பட உள்ளது.
பக்தர்கள் அனைவரும் மலையை விட்டு வெளியேறியதால் மலை வெறிச்சோடியது. முன்பு நடந்த ஆடி அமாவாசைகளில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கியும், மூச்சுத்திணறலால் உயிர்பலி ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு எவ்வித அசம்பாவிதமும் இன்றி விழா அமைதியாக முடிந்தது. மலையடிவாரத்தில் வனத்துறையினரால் பக்தர்களிடம் சோதனை செய்து பறிமுதல் செய்த பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் டன் கணக்கில் குவிந்தன. இதை மலை அடிவாரத்தில் குவித்துவனத்துறையினரால் தீ வைத்து அழிக்கப்பட்டது. ஆனாலும், பக்தர்கள், நடைபாதை கடையினராலும் போடப்பட்ட குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் மலை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தவும் வனத்துறையினர் முன்வரவேண்டும்.