/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் அலுவலக கட்டடங்கள் : நகரில் முகாமிடும் வி.ஏ.ஓ.,க்கள்
/
இடியும் நிலையில் அலுவலக கட்டடங்கள் : நகரில் முகாமிடும் வி.ஏ.ஓ.,க்கள்
இடியும் நிலையில் அலுவலக கட்டடங்கள் : நகரில் முகாமிடும் வி.ஏ.ஓ.,க்கள்
இடியும் நிலையில் அலுவலக கட்டடங்கள் : நகரில் முகாமிடும் வி.ஏ.ஓ.,க்கள்
ADDED : ஆக 02, 2011 11:32 PM
நரிக்குடி : இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள் உள்ளதால்,நகரில் முகாமிடும் நிலையில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளனர்.
திருச்சுழி தாலுகாவில் 68 வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிய வேண்டும்.
ஆனால் இங்கு 36 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். 32 கிராமங்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் இல்லாத நிலையில், இரண்டு கிராமங்களை சேர்த்து பார்க்கும் நிலையில்தான் வி.ஏ.ஓ., க்கள் உள்ளனர் . இவர்களால் முழுமையான பணி செய்ய முடியவில்லை. தினமும் ஒவ்வொரு கிராமம் செல்ல வேண்டி உள்ளதால் சிரமம் படுகின்றனர். 68 வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களில் பத்தில் கூட கட்டடங்கள் முழுமையாக இல்லை. அனைத்தும் இடிந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ள இங்கு , வி.ஏ.ஓ., க்கள் அமர்ந்து பணியாற்ற முடிவதில்லை. கட்டடங்களில் மின் இணைப்பு வசதி கூட இல்லை. பெயருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை தற்போது செயல்பாட்டில் இல்லை. குடிநீர் , கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதில் பெண் அலுவலர்கள்தான் பெரிதும் பாதிக்கின்றனர் . வி.ஏ.ஓ., க்கள் சிலர் கூறுகையில், 'வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்கள் இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனாலே நகர்புறங்களில் இருக்க விரும்புகிறோம்,'என்றனர். தமிழ்நாடு வி.ஏ.ஓ., க்கள் சங்க முன்னாள் வட்ட செயலாளர் குருசாமி கூறுகையில்,'' அனைத்து வி.ஏ.ஓ., அலுவலக கட்டடங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அலுவலர்கள் தங்கி பணியாற்ற முடியவில்லை. கிராமங்களில் குடியிருப்புடன் கூடிய அலுவலகம் கட்டினால், வி.ஏ.ஓ., க்கள் அனைவரும் அந்தந்த கிராமத்தில் தங்கி பணியாற்ற வசதியாக இருக்கும்,'' என்றார்.