/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்கள் மறியல்: அதிகாரிகள் சமரசம்
/
மாணவர்கள் மறியல்: அதிகாரிகள் சமரசம்
ADDED : ஆக 25, 2011 11:41 PM
சாத்தூர் : சாத்தூர் சிவகாசி சாலையில் உள்ளது சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.
இப்பள்ளியில் பாரபட்டியை சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் விஷ்ணு 14, நேற்று முன்தினம் மாலையில் பள்ளி விட்டு திரும்பும் போது சின்னகாமன்பட்டி பஸ்ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத கார் மோதியது. விஷ்ணு படுகாயமடைந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விஷ்ணு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை கண்டு பிடித்து டிரைவரை கைது செய்ய கோரியும், சாத்தூர் சிவகாசி சாலையில் சின்னக்காமன்பட்டியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் மாணவர்கள் நேற்று காலை ஒன்பது மணியளவில் பள்ளியை புறக்கணித்து ரோடு மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். தகவலறிந்த சாத்தூர் தாசில்தார் சங்கரலிங்கம், டி.எஸ்.பி சின்னையா மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதன்பின்னர் 9.30 மணிக்கு மீண்டும் பள்ளிக்கூடம் நடந்தது.