/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : இளைஞர் காங்., தலைவர் பேட்டி
/
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : இளைஞர் காங்., தலைவர் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : இளைஞர் காங்., தலைவர் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி : இளைஞர் காங்., தலைவர் பேட்டி
ADDED : செப் 08, 2011 10:34 PM
விருதுநகர் : ''உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல், தனித்து போட்டியிட்டால் தான், காங்., க்கு சிறந்த எதிர்காலம்,'' என, இளைஞர் காங்., மாநில தலைவர் யுவராஜ் கூறினார்.
அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் காங்., சார்பில் போட்டியிட, 9,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இளைஞர் காங்., க்கு 50 சதவீதம் இடம் ஒதுக்க தலைமையை கேட்டுள்ளோம். ராஜிவ் கொலை குற்றவாளிகளை, கொலையாளியாக தான் பார்க்க வேண்டும். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என, சில சுயநலவாதிகள் கூறுகின்றனர். மூவரையும் உடனே தூக்கிலிட வேண்டும். ராஜிவ் கொலையின் போது, 13 அப்பாவி தமிழர்கள் இறந்தனர். மூவரையும் தூக்கிலிட கோரி, 13 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இவர்களுக்கு இளைஞர் காங்., ஆதரவு கொடுக்கும். தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் சட்டசபை தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல், தனித்து போட்டியிட தலைமையை கேட்டுள்ளோம், என்றார்.