/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ஆஸ்பத்திரியில் சுகாதார குழு : தீக்காய பிரிவை நவீனபடுத்த ஆய்வு
/
சிவகாசி ஆஸ்பத்திரியில் சுகாதார குழு : தீக்காய பிரிவை நவீனபடுத்த ஆய்வு
சிவகாசி ஆஸ்பத்திரியில் சுகாதார குழு : தீக்காய பிரிவை நவீனபடுத்த ஆய்வு
சிவகாசி ஆஸ்பத்திரியில் சுகாதார குழு : தீக்காய பிரிவை நவீனபடுத்த ஆய்வு
ADDED : செப் 11, 2011 11:15 PM
சிவகாசி : சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவை நவீனப்படுத்த, சுகாதார துறை மருத்துவ குழு ஆய்வு செய்கிறது.
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ,குளிர்சாதன வசதியுடன் 16 படுக்கைகள் கொண்ட தீக்காய சிகிச்சை பிரிவு தனி வார்டு உள்ளது. பட்டாசு வெடி விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க வசதி இல்லை. அதற்கான பயிற்சி பெற்ற பணியாளர்கள், சிறப்பு மருத்துவர் நியமனமும் இல்லை. இங்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உயிர்பிரியும் கடைசி தருவாயில் உள்ளவரை கூட, தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மதுரைக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வெடி விபத்தில் பாதிக்கும் உறவினர்கள் சிவகாசி ஆஸ்பத்திரியில் கூடி சட்டம் -ஒழுங்கு பிரச்னை உருவாக்கினால், போலீசுக்கு தொல்லை என்பதை மனதில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை மதுரைக்கு பரிந்துரை செய்கின்றனர். இது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதனால் சிவகாசி ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவை, நவீன மருந்துவ வசதியுடன் மாற்ற கோரிக்கை எழுந்துஉள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் ராஜேந்திரபாலாஜி எம்.எல்.ஏ., பேசியதன்படி, ''ரூ.4 கோடி மதிப்பீட்டில் நவீன சிகிச்சை பிரிவு அமைக்கப்பட,'' உள்ளது. இதை தொடர்ந்து ஓய்வு மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ தலைமையில், தமிழ்நாடு சுகாதார திட்ட குழுவினர் சிவகாசி தீக்காய சிகிச்சை பிரிவினை ஆய்வு செய்தனர்.