/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ம.தி.மு.க.: உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு
/
ம.தி.மு.க.: உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு
ADDED : செப் 11, 2011 11:15 PM
விருதுநகர் ய: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க.
சார்பில் விருப்ப மனு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க. சார்பில் கழத் தொணடர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருவதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தெரிவித்தார். ம.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளபடி, இம்மனுக்கள் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை பெறப்படும் என்றும், விண்ணப்ப படிவங்கள் தற்போது விருதுநகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் ரூ. 10 கட்டி பெற்றுக் கொள்ளலாம் எனவும்,
நகர் மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 3000, நகர் மன்ற உறுப்பினருக்கு ரூ. 2000, பேரூராட்சி மன்றத் தலைவருக்கு ரூ. 500, மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு ரூ. 3000, ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு ரூ. 2000 தலைமை கழகத்தால் நிர்ணயம் செ#யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.