/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் நகராட்சியில் 52 ஆயிரம் வாக்காளர்கள்
/
விருதுநகர் நகராட்சியில் 52 ஆயிரம் வாக்காளர்கள்
ADDED : செப் 23, 2011 01:05 AM
விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளில் 52 ஆயிரத்து 865 வாக்காளர்கள் 57 ஓட்டு சாவடிகளில் ஓட்டளிக்க உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் அக்., 17, 19 ல் நடைபெறுவதாக மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 7 வது வார்டு எஸ்.சி, பொது: 12 வது வார்டு எஸ்.சி, பெண்: 2,4,8,13,15,18,19,20,29,30,36 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது: மீதமுள்ள 23 வார்டுகள் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண் வாக்காளர்கள் 26 ஆயிரத்து 75 பேர், பெண் வாக்காளர்கள் 26 ஆயிரத்து 790 பேர் என மொத்தம் 52 ஆயிரத்து 865 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் 57 ஓட்டு சாவடிகளில் ஓட்டளிக்க உள்ளனர்.