/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காங்., போட்டி வேட்பாளர் சமாதான முயற்சி தோல்வி : மேலிட பார்வையாளர் ஏமாற்றம்

ADDED : அக் 01, 2011 09:45 PM
சிவகாசி : சிவகாசி நகராட்சி காங்கிரஸ் போட்டி வேட்பாளரை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியால், மேலிட பார்வையாளர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
சிவகாசி நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில், அசோகன் மனுதாக்கல் செய்துள்ளார் . சீட் கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக, நகராட்சிமுன்னாள் தலைவர் ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்தார். இதனால் காங்கிரசார் அதிருப்தி அடைந்தனர். இப் பிரச்னை கட்சி மாநில தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து, காங்., மேலிட பார்வையாளர் பெங்களூரூவை சேர்ந்த பிரகாஷ், ஞானசேகரனிடம் மொபைலில் பேசினார். பிரச்னை முடியாததால் சிவகாசிக்கே நேரில் வந்தார். தேர்தல் பணிக்குழு மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜகோபால், வேல்சாமி முன்னிலையில், மேலிட பார்வையாளர் பிரகாஷ் மீண்டும் ஞானசேகரனிடம் மொபைலில் பேசினார். மாலையில் பேச்சு வார்த்தைக்கு வருவதாக ஞானசேகரன் கூறியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிவரை , மேலிட பார்வையாளர் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் ஞானசேகரன் வரவில்லை. மொபைல் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மேலிட பார்வையாளர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.