/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் "கிடுக்கிப்பிடி'
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் "கிடுக்கிப்பிடி'
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் "கிடுக்கிப்பிடி'
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் "கிடுக்கிப்பிடி'
ADDED : அக் 08, 2011 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் ஓட்டுச்சாவடியை, கடைசிநாளில் தெரிவிக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டசபை தேர்தலின் போது , ஓட்டுச்சாவடி அலுவலர் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்ட போதிலும், எந்த ஓட்டுச்சாவடி என்பது தேர்தலுக்கு முதல்நாள் நடந்த பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஓட்டுச்சாவடி அலுவலர்களை சரி கட்டும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதே நடைமுறையை தற்போதும் மாநில தேர்தல் கமிஷன் கடைபிடிப்பதால், ஓட்டு சாவடி அலுவலர்களை சரிக்கட்ட முடியாத நிலை கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.