/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மகப்பேறுமருத்துவமனை கட்டடம் சேதம் பராமரிப்பு பணிகள் தேவை

ADDED : ஜூலை 24, 2025 05:36 AM
விருதுநகர்:  விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தின் பின்புறம் சேதமாகி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இவற்றை முறையாக பராமரிக்க தேவையான பணிகளை உடனே துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் என தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த கட்டடத்தில் பிரசவம், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை, தாய்ப்பால் வங்கி உள்பட நவீன சிகிச்சை வசதிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் கட்டடத்திற்கு முறையான பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் பின்பக்கம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. சுவற்றில் ஈரப்பதம் அதிகமாகி கட்டடம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பல முறை தெரிவித்தும் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் சுவர்கள் தற்போது பலவீனமடைந்து வருகிறது. எனவே விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டடத்திற்கு தேவையான பராமரிப்பு பணிகளை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.