/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் தலைமை தபால்அலுவலக கட்டடம் சேதம்
/
விருதுநகர் தலைமை தபால்அலுவலக கட்டடம் சேதம்
ADDED : ஜூலை 22, 2025 03:26 AM

விருதுநகர்: விருதுநகர் தலைமை தபால் அலுவலக கட்டடம் முறையாக பராமரிப்பு பணிகள்  செய்யப்படாததால் சேதமாகி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இக்கட்டடத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும்.
விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே மல்லாங்கிணர் ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினசரி தபால்கள் அனுப்பவும், புதிய அஞ்சலக கணக்கு துவங்கவும், ஆதார் சேவைகளுக்காகவும் விருதுநகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலக கட்டடம் முறையாக பராமரிக்கப்படாததால் பின்பக்க சுவற்றில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. சுவற்றில் ஈரப்பதம் எப்போதும் இருப்பதால் சுவர் பலவீனமடைந்து காணப்படுகிறது.
இக்கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் சரியாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. எனவே விருதுநகர் தலைமை தபால் அஞ்சலக அலுவலக கட்டடத்தை முறையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

