/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் நகராட்சி வரி விதிப்பில் குளறுபடி
/
விருதுநகர் நகராட்சி வரி விதிப்பில் குளறுபடி
ADDED : டிச 05, 2024 05:23 AM
விருதுநகர்: முதல்வர் ஸ்டாலின் தனிப்பிரிவுக்கு விருதுநகர்நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி அளித்த மனு:
தமிழகத்தில் வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு 6 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டது. விருதுநகர் நகராட்சியில் பகுதியில் வரி சீரமைப்பு என்ற பெயரில் வரி விதிப்பு மாற்றங்கள் நடந்துஉள்ளது. 100 ச.அடிக்கும் குறைவான 90 ஆண்டுகள்பழைய பயன்பாட்டில் இல்லாத வீட்டிற்கு 2023--24 ஆண்டிற்கு ரூ. 68 வீட்டு வரி, குப்பை வரி ரூ. 180 இருந்தது. தற்போது வீட்டு வரி ரூ. 713, குப்பை வரி ரூ. 240 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 48 ச.அடி உள்ள கடைக்கு 2022--23 ஆண்டில் சொத்து வரி ரூ. 369, குப்பை வரி ரூ. 180 ஆக இருந்தது. தற்போது சொத்து வரி ரூ. 4513, குப்பை வரி ரூ. 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19 ஆண்டுக்கு முன்பு வரை நகராட்சிக்கு வரி கட்டுபவர்களுக்கு ரசீதில் சொத்து வரி என இருந்தது.
அதன் பின்பு ரசீதில் வீடு, கமர்சியல் என குறிப்பிட்டு வழங்கப்பட்டது. இதில் சில கடைகளுக்கு தவறுதலாக வீடு என ரசீது வழங்கியுள்ளனர். இதற்கு சொத்தின் உரிமையாளர்கள் எப்படி பொறுப்பாக முடியும். பழைய கட்டடங்களுக்கு பழைய கணக்கீட்டு முறையில் வரி உயர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.