ADDED : ஜூலை 29, 2011 11:03 PM
விருதுநகர் : விருதுநகரில் நடந்த காமராஜ் பல்கலை கல்லூரிகளிடையேயான நீச்சல் போட்டியில், செந்திக்குமார நாடார் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.மதுரை காமராஜ் பல்கலை கல்லுரிகளுக்கிடையே நீச்சல் போட்டி விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்தது.
20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 140 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 29 வயதிற்குட்பட்டோருக்காக பிரிஸ்ட்ரோக், பட்டர்பிளை, பிரஸ்ஸ்ட்ரோக், பேக்ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் செந்திக்குமார நாடார் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை மதுரை வக்பு கல்லூரி பெற்றது.பெண்கள் பிரிவில் மதுரை மீனாட்சி கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. தனி நபர் சாம்பியன் போட்டியில், செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர் பி.ரவிக்குமார் பெற்றார். பெண்கள் பிரிவில் மதுரை மீனாட்சி கல்லூரி பாக்கியலட்சுமி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி செயலாளர் முரளிதரன், துணை தலைவர் பரிமளா பரிசுகளை வழங்கினர்.