ADDED : ஆக 03, 2011 11:26 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நடக்கும் நூதன திருட்டால் வியாபாரிகள் பாதிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை பஜார் பகுதி செருப்பு மற்றும் பேக் விற்கும் ஒரு கடைக்கு வந்த 35 வயது கொண்ட உயரமான நபர், செருப்புகள் மற்றும் பேக்குளை தேர்வு செய்தார். பின் அந்த பகுதி டாக்டர் பெயரை கூறி, அந்த கிளினிக்கிற்கு பொருட்களை கொண்டு வர கூறி சென்றார். கடைகாரரும் செருப்புகள் மற்றும் பேக்குகளை கிளினிக்கிற்கு கொண்டு சென்றார். கிளினிக்கில் இருந்த அந்த நபர் பொருட்களை வாங்கி கொண்டு, டாக்டரிடம் காண்பித்து வருவதாக பொருட்களுடன் சென்றவர் வேறு வழியாக 'எஸ்கேப்' ஆனார். பல மணி நேரம் காத்திருந்த கடைக்காரர், தான் ஏமாந்ததை உணர்ந்து திரும்பினார். இது போல் மறு நாளும் அதே நபர் வேறு கடைக்கு சென்று 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பைகளை எடுத்து கொண்டு, வழக்கம் போல் க மற்றொரு டாக்டர் கிளினிக் கொண்டு வர கூறி பேக்குகளுடன் மாயமானார். இது போன்ற நூதன மோசடி நபரை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க போலீசார் முன் வர வேண்டும்.

