/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாக்டரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய டாக்டர் குடும்பம் மீது வழக்கு
/
டாக்டரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய டாக்டர் குடும்பம் மீது வழக்கு
டாக்டரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய டாக்டர் குடும்பம் மீது வழக்கு
டாக்டரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய டாக்டர் குடும்பம் மீது வழக்கு
ADDED : செப் 21, 2011 11:28 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் டாக்டரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய, டாக்டர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மதுரை கே.புதூரை சேர்ந்தவர் பிரியாஸ்ரீ, 26.
இவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இவரும், இதே ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரியும் சாத்தூரை சேர்ந்த கணேஷ்பெருமாளும், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். மூன்று மாதத்திற்கு முன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கணேஷ் பெருமாளிடம் பிரியாஸ்ரீ கேட்டுள்ளார். இந்நிலையில், பிரியாஸ்ரீ பெற்றோர்களுக்கு காதல் விவகாரம் தெரிந்தது.
இதை தொடர்ந்து தன் மகளுடன் பெற்றோர், சாத்தூரில் உள்ள கணேஷ்பெருமாள் வீட்டிற்கு சென்று, திருமணம் செய்வது குறித்து பேசியுள்ளனர். கணேஷ்பெருமாள் பெற்றோர் மற்றும் உறவினர்கள், 'தாழ்ந்த ஜாதி என்பதால் திருமணம் செய்ய முடியாது ,' என, மிரட்டி, அவமானப்படுத்தி அனுப்பியதாக, அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் பிரியாஸ்ரீ புகார் செய்தார். அதன்படி, கணேஷ்பெருமாள், அவரின் தந்தை பெருமாள்சாமி, சித்தி சின்னரதி, சகோதரி ஜெயலட்சுமி, அவரின் கணவன் முருகன், சித்தப்பா பால்பாண்டி மற்றும் உறவினர் பாஸ்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.