/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரதட்சணையை திருப்பி கொடுக்க மறுப்பு
/
வரதட்சணையை திருப்பி கொடுக்க மறுப்பு
ADDED : ஆக 05, 2011 09:59 PM
விருதுநகர்:விருதுநகர் அருகே அழகாபுரியில் கணவர் குடும்பத்தாரின் கொடுமை
தாங்காமல், பெண் இறந்ததால், திருமணத்தின் போது வழங்கப்பட்ட பொருட்களை
கொடுக்க மறுத்த கணவர் குடும்பத்தார் மீது வழக்கு பதிய கோர்ட்
உத்தரவிட்டது.விருதுநகர் பாண்டியன் நகர் எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்தவர் டி.
தாமஸ். இவர் தனது மகள் சத்யாவை 2009 ஜூன் 9ல் எம். அழகாபுரியை சேர்ந்த
டேவிட் மகன் தேவராஜனுக்கு(30) திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்திற்கு
பின் சத்யாவை கணவர் தேவராஜன், மாமனார் டேவிட், மாமியார் அன்புமணி ஆகியோர்
கொடுமைபடுத்தினர்.
இதனால் சத்யா 2010 பிப்ரவரி 22ல் தூக்கிலிட்டு இறந்தார்.
இது தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில்,
திருமணத்தின் போது கணவர் வீட்டாருக்கு வரதட்சணையாக 25 ஆயிரம் ரூபாய், 2
பவுன் நகை, ஒரு பவுன் கம்மல், மோதிரம், பாத்திரங்கள் கொடுத்துள்ளனர். சத்யா
இறந்ததற்கு பின் திருப்பி கேட்டபோது, தேவராஜன் குடும்பத்தார் மறுத்தனர்.
விருதுநகர் ஜே.எம். 1 கோர்ட் மாஜிஸ்திரேட் சசிரேகா உத்தரவுபடி, சூலக்கரை
போலீசார், தேவராஜன் குடும்பத்தார் மீது வழக்கு பதிந்துள்ளனர்.