ADDED : செப் 20, 2011 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தூர்:சேத்தூர் அருகே வடக்கு தேவதானத்தை சேர்ந்தவர் அம்மையப்பன், 40.
இவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மற்றும் கருப்பையா நண்பருக்கு மது
வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனிடையே,
கருப்பையா அவரது தந்தை கணேசன் இருவரும் அம்மையப்பனை கத்தியால் குத்தி
காயப்படுத்தினர். அம்மையப்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கருப்பையாவை தளவாய்புரம் போலீசார் கைது செய்து, கணேசனை தேடி வருகின்றனர்.