சேத்தூர்:இளம் பெண் தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் தட்டாம்பாறையை சேர்ந்தவர்
சங்கீதா, 20.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மனோராஜ் என்பவருக்கும், இரண்டு
ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் தளவாய்புரத்தில்
தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்தனர். இரண்டு நாட்களுக்கு முன் இருவரும்
துணி எடுத்து வந்துள்ளனர்.இதை பக்கத்து வீட்டுக்கார்களிடம் காட்டிய போது,
ஒரு பெண், இது உன் கணவருக்கு பொருத்தமாக இல்லை என கூறியுள்ளார். இதனால்
கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்தது. வீட்டில் ஆள் இல்லாதபோது சேலையால்
தூக்கு போட்டு கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சங்கீதா
தந்தை நடராஜன் புகாரின்படி, கண்ணன் டி.எஸ்.பி., சேத்தூர் ரூரல் எஸ்.ஐ.,
வெள்ளச்சாமி விசாரித்தனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும்
உத்தரவிடப்பட்டுள்ளது.