ADDED : பிப் 17, 2024 04:23 AM
சாத்துார்: சாத்துார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் விருகேர் இணையதள சேவை துவக்க விழா நேற்று நடந்தது.
கலெக்டர் ஜெயசீலின் தலைமை வகித்து புதிய இணையதள சேவையை துவக்கி வைத்தார். www.virucare.in என்ற இணையதள சேவை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தாய்மார்களுடைய இறப்பு விகிதத்தை குறைப்பதற்காகவும்
இளம்பெண்கள் கருவுற்ற தாய்மார்களாக ஆகும்போது அவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் தொடர்ச்சியாக அவர்களுடைய உடல்நலம் கர்ப்ப காலத்தில் அவர்களுடைய ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து நல்ல ஆரோக்கியமான தாய்மார்களாகவும் குழந்தை பேறுவை உறுதி செய்வதற்காக அவர்களுடைய தகவல்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு மாவட்டநிர்வாகம் இந்த புதிய இணைய தள சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இணை இயக்குனர் ஊரகநலப் பணிகள் மாரியப்பன், விருதுநகர் துணை இயக்குனர் யசோதா மணி, சிவகாசி துணை இயக்குனர் கலு சிவலிங்கம், சாத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முனிசாய்கேசவன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பலர் விழாவில் கலந்து கொண்டனர்.