நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, ராஜபாளையம் கோடைகால
நீர்தேக்கத்தில் சேமிக்கப்படும்.
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால்,
நீர்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. வெயில் காரணமாக குடிநீர்
தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மழைவேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்
சிறப்பு தொழுகை ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் நடந்தது. இறைவனின் அருட்கொடை
என்ற தலைப்பில் பேச்சாளர் முஹம்மது ஷபீக் பேசினார். அப்பகுதியை சேர்ந்த
மக்கள் கலந்துகொண்டனர்.