/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அன்னதானம் சாப்பிட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
/
அன்னதானம் சாப்பிட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
அன்னதானம் சாப்பிட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
அன்னதானம் சாப்பிட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
ADDED : ஜூன் 11, 2025 02:14 AM

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி எஸ்.கல்விமடையில் கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம் சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எஸ்.கல்விமடையில் இரண்டு நாட்களுக்கு முன் கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் சாப்பிட்டனர். நேற்று முன்தினம் இரவு கல்விமடையைச் சேர்ந்த தனுஷ் 7, கவியரசன் 12, கார்த்திகா 12, திருப்பதி, ராஜாத்தி, பார்த்திபன் 13, சங்கையா, சூரிய பிரகாஷ் 18, ராஜேஸ்வரி 34, ராஜமருது 15, கண்ணன் 48, ரஞ்சித் 47, விஜயகுரு 33, அனுசியா 22, குழந்தைகள், பெரியவர்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கினர்.
பாதிக்கப்பட்டவர்கள் திருப்புவனம், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றனர். ஒரு சிலருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. திருவிழா முடிந்தபின் பெரும்பாலான வீடுகளில் கறி சமைத்து சாப்பிட்டனர். அன்னதானத்தை தொடர்ந்து கறி சமைத்து சாப்பிட்டதால் பிரச்னை ஏற்பட்டதா அல்லது குடிநீரில் ஏதும் பிரச்னையா என வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.