/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்றும், நாளையும் வாக்காளர் முகாம்: 15.72 லட்சம் படிவங்கள் வினேியாகம்
/
இன்றும், நாளையும் வாக்காளர் முகாம்: 15.72 லட்சம் படிவங்கள் வினேியாகம்
இன்றும், நாளையும் வாக்காளர் முகாம்: 15.72 லட்சம் படிவங்கள் வினேியாகம்
இன்றும், நாளையும் வாக்காளர் முகாம்: 15.72 லட்சம் படிவங்கள் வினேியாகம்
ADDED : நவ 19, 2025 07:52 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்றும்(நவ. 19), நாளையும்(நவ. 20) வாக்காளர் தீவிர திருத்த படிவம் வழங்கும் முகாம் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நடக்கிறது. இதுவரை 15.72 லட்சம் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2026 ஜன. 1ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்காக சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் நடக்கிறது.
இதுவரை 15 லட்சத்து 72 ஆயிரத்து 654 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று(நவ. 19) நாளை (நவ. 20) ஆகிய 2 நாட் களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள் எவரேனும் இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் இச்சிறப்பு முகாம்களுக்குச் சென்று தங்களுக்கான, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான கணக் கெடுப்புப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள லாம்.
மேலும் கணக்கெடுப்புப் படிவங்களை ஏற்கெனவே பெற்றுள்ளவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப அளிக்கலாம்.
படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரையோ அல்லது தங்களின் தந்தை, தாய், தாத்தா, பாட்டி பெயர்களைக் கண்டறிவதற்கும் உதவி தேவைப் பட்டால் இம்முகாம் களுக்குச் சென்று தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.

