/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

ADDED : டிச 29, 2025 06:24 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்ய பார்வையாளராக தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அரண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று ராஜபாளையம், என்.ஏ.அன்னப்பராஜா பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்துார் லயன் மெட்ரிக் பள்ளி ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.
பின்னர், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்த பணிகள், சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலருடன் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். டி.ஆர்.ஓ., ஆனந்தி, சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.