/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
/
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
ADDED : டிச 28, 2025 05:49 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அருண் தம்புராஜ் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று (டிச.28) ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவுற்று டிச. 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெயர் இல்லாதவர்கள், திருத்தம், புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் ஜன. 18 வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
இதற்காக அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று, ஜன. 3, 4ல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அருண் தம்புராஜ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 9:00 மணி முதல் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்யும் அவர், மதியம் 3:00 மணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். குறைகள் தெரிவிக்க விரும்புவோர் நேரிலோ அல்லது 73581 50776 என்ற அலை பேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜன.18 வரை அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தாசில்தார் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலோ, தபால் மூலமாகவோ அளிக்கலாம். https://voters.eci.gov.in என்ற வலைதளம் மூலமும், ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன்' என்ற அலைபேசி செயலி மூலமும் சமர்ப்பிக்கலாம்.

