/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகைகுளம் கண்மாய் ஷட்டர்கள் கசிவு: வீணாகும் தண்ணீர்
/
வாகைகுளம் கண்மாய் ஷட்டர்கள் கசிவு: வீணாகும் தண்ணீர்
வாகைகுளம் கண்மாய் ஷட்டர்கள் கசிவு: வீணாகும் தண்ணீர்
வாகைகுளம் கண்மாய் ஷட்டர்கள் கசிவு: வீணாகும் தண்ணீர்
ADDED : ஜன 18, 2024 05:22 AM

சத்திரப்பட்டி: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாயில் ஷட்டர்களில் கசிவால் தண்ணீர் வீணாக வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர் மழையால் இந்த ஆண்டு அனைத்து கண்மாய்களும் நிறைந்து வழிகின்றன சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசனப்பரப்பை கொண்டுள்ளது.
இக்கண்மாய் பாசனத்தை நம்பி நெல், கரும்பு, வாழை மற்றும் கடைமடை பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக பெய்த தொடர் மழையால் கண்மாய் பெருகி மறுகால் பாய்கிறது. இதனால் பாசனப்பகுதி நெல் விவசாயிகள் தற்போதைய தண்ணீர் தேவைக்கு பிரச்சனை இன்றி உள்ளனர்.
இந்நிலையில் கோடை விவசாயத்திற்கு தேக்கி வைக்க வேண்டிய கண்மாய் நீர் கலுங்கல் அருகே உள்ள இரண்டு ஷட்டர்களில் உள்ள கசிவுகளால் பெருமளவு வெளியேறி வருகிறது . இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சங்கரன்: கிணறு வசதியில்லா விவசாயிகள் கண்மாய் நீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில் பெருகி உள்ள கண்மாயிலிருந்து ஷட்டர்கள் வழியே அதிகளவு வெளியேறி நீர் இருப்பை குறைத்து விடும். இதனால் கோடை பருவ நெற்பயிற் சாகுபடி விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வெளியேறாதவாறு ஷட்டர்களில் கசிவுகளை தடுக்க வேண்டும்.