/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜன.20 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை உடனடி தேவை தினசரி சிறப்பு ரயில்கள்
/
ஜன.20 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை உடனடி தேவை தினசரி சிறப்பு ரயில்கள்
ஜன.20 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை உடனடி தேவை தினசரி சிறப்பு ரயில்கள்
ஜன.20 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை உடனடி தேவை தினசரி சிறப்பு ரயில்கள்
ADDED : டிச 30, 2024 01:02 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ஜனவரி 20 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை இருப்பதால், உடனடியாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்தே பாரத், மதுரை தேஜஸ் ரயில்கள் வாரத்தில் 6 நாட்களும்,குருவாயூர், வைகை, திருச்செந்துார், கன்னியாகுமரி, கொல்லம், முத்து நகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, பாண்டியன் ஆகிய ரயில்கள் தினசரி இயங்கி வருகிறது. இது தவிர சிலம்பு, போடி, கொச்சுவேலி ரயில்களும் வாரத்தில் சில நாட்கள் இயங்கி வருகிறது. இத்தனை ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயங்கியும் வார விடுமுறை நாட்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலையே காணப்படுவது
பல ஆண்டுகளாக தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. புதிதாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் உடனடி முன்பதிவு ஏற்பட்டு விடுகிறது.
இந்நிலையில் தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை, ஆங்கில புத்தாண்டு, அடுத்து பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்து செல்ல வந்தே பாரத், தேஜஸ் ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை தான் காணப்படுகிறது.
மற்ற அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை, ரிசர்வேசன் செய்ய முடியாத ரெக்ரீட் நிலை அதிகளவிலும் சில ரயில்களில் காணப்படுகிறது.
இதனால் தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை முடிந்து சொந்த ஊர் வரவும், சென்னை திரும்பவும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலை ஜன. 20 வரை உள்ளதால் உடனடியாக சென்னையில் இருந்து நாகர்கோவில், செங்கோட்டை, ராமநாதபுரம், மதுரை மற்றும் திண்டுக்கல்-, பழநி வழியாக கோவை, சேலம் -, ஈரோடு வழியாக கோவை நகரங்களுக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடி அறிவிப்பு வெளியிட வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.