/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ்காரரை கத்தியால் குத்தி பிடிவாரன்ட் கைதி தப்ப முயற்சி
/
போலீஸ்காரரை கத்தியால் குத்தி பிடிவாரன்ட் கைதி தப்ப முயற்சி
போலீஸ்காரரை கத்தியால் குத்தி பிடிவாரன்ட் கைதி தப்ப முயற்சி
போலீஸ்காரரை கத்தியால் குத்தி பிடிவாரன்ட் கைதி தப்ப முயற்சி
ADDED : நவ 07, 2025 11:46 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிடிவாரன்ட் கைதி மரியராஜ் 29, ஸ்ரீவில்லிபுத்துார் தனிப்படை போலீசார் வினோத் குமாரை 38, கத்தியால் குத்தி விட்டு தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தப்ப முயன்றார்.
சிவகாசி வடபட்டி மரியராஜ் கூலித்தொழிலாளி. இவர் மீது பெண்கள் வன்கொடுமை தொடர்பாக மல்லி, கிருஷ்ணன்கோவில் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்குகளின் விசாரணைக்கு மரியராஜ் நீண்ட நாட்களாக ஆஜராகாததால் அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் தனிப்படை போலீசார் அலெக்ஸ் பாண்டியன் 36, வினோத்குமார் நேற்று காலை 9:30 மணிக்கு சிவகாசி வேலாயுதபுரம் ரஸ்தா பகுதியில் நின்றிருந்த மரியராஜை பிடித்து தங்களது டூவீலரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
சிவகாசி ஏ.ஜெ. கல்லுாரி அருகில் வந்தபோது, மரியராஜ் போலீஸ்காரர் வினோத்குமாரின் கையில் கத்தியால் குத்தி விட்டு, தனது கழுத்தை அறுத்து தப்ப முயன்றார். இதில் அவருக்கு 2 கைகளிலும் காயம் ஏற்பட்டது.
இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். டி.எஸ்.பி., ராஜா விசாரித்தார். மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

