/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்பை சுற்றி தேங்கும் கழிவு நீர்
/
குடியிருப்பை சுற்றி தேங்கும் கழிவு நீர்
ADDED : டிச 26, 2024 04:33 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்  அசோக் நகர் நகராட்சி பூங்கா பகுதியில் குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் தேங்குவதால் மக்கள் கொசுக்கடி, தொற்று நோயால் பாதிப்படைந்து வருகின்றனர்.
அசோகர் நகரில்  நகராட்சி பூங்கா பின்புறம் புதிதாக அமைந்த வடிகால் சரியான முறையில் கழிவுநீர் செல்ல பாதை அமைக்கவில்லை.  இதனால் கழிவுநீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.
இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம், கொசு தொல்லை,  சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
எனவே,  மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் செல்லவும், தற்போது தங்கி உள்ள கழிவு தண்ணீரை வெளியேற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

