/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுசிகா நதியில் சுத்திகரிப்பு குழாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தேங்கிய தண்ணீர்: மண் அள்ளும் இயந்திரத்தால் வெளியேற்றம்

ADDED : நவ 02, 2025 11:55 PM
விருதுநகர்:  பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய்கள் கவுசிகா நதியில் அமைக்க தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. இத் தண்ணீரை மோட்டார் மூலம் எளிதாக வெளியேற்றாமல் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் தண்ணீரை எடுத்து வெளியேற்றினர். அரசின் எந்த ஒரு பணிகளும் முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருதுநகர் கவுசிகா நதியை ரூ.20.44 கோடியில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி, நீர்வரத்து கால்வாய்களை துார்வாரும் பணிகளை ஆக.5ல் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். நதியில் 11.50 கி.மீ., வரையிலான நீளம் வரை துார்வாரி சீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் தடுப்பணை, குறுக்கு கட்டுமான பணிகளை புனரமைத்து தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும், நகரில் இருந்து வரக்கூடிய கழிவு நீர் எங்கெல்லாம் கலக்கிறதோ, அந்த இடங்களை கண்டறிந்து 1.60 கி.மீ., நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, நதியில் கலக்காமல் அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கும் பணிகளும் செய்யப்பட திட்டமிடப்பட்டது.
ஆனால் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான குழாய்கள் கவுசிகா நதியில் பதிக்கும் பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றாமல் மண் அள்ளும் இயந்திரத்தை வைத்து தண்ணீரை எடுத்து நதியில் கொட்டினர். மோட்டாரில் தண்ணீரை வெளியேற்றுவது எளிதானதாக இருந்தும் பணியை முறையாக செய்யாமல் இருக்கவே மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கவுசிகாநதியில் துார்வாரும் பணிகள், சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் பதிக்கும் பணிகள் முறையாக நடப்பதை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.