/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு செய்யப்படும் நீர்நிலைகள்; கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய் துறை
/
ஆக்கிரமிப்பு செய்யப்படும் நீர்நிலைகள்; கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய் துறை
ஆக்கிரமிப்பு செய்யப்படும் நீர்நிலைகள்; கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய் துறை
ஆக்கிரமிப்பு செய்யப்படும் நீர்நிலைகள்; கண்டுகொள்ளாத நகராட்சி, வருவாய் துறை
ADDED : மார் 16, 2025 06:56 AM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் பகுதியில் உள்ள மழைநீர் வரத்து ஓடைகள், நீர் பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதை நகராட்சி, வருவாய் துறையினர் கண்டுகொள்வது இல்லை.
அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் மலையரசன் கோயில் உள்ளது. கோயிலை சுற்றி முன்பு 3 ஊருணிகள் இருந்துள்ளது. இவற்றில் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் இவை நிறைந்து அங்குள்ள மழை நீர் வரத்து ஓடை வழியாக தண்ணீர் பெரிய கண்மாய்க்கு சென்றடையும். நாளடைவில் ஊருணிகள் பராமரிப்பு இன்றி போனது.
இவற்றின் பரப்பளவும் குறைந்து போனது. கழிவு நீரும் குப்பை கொட்டும் இடமாக மாறிப் போய்விட்டது. ஊருணிக்கு அருகில் உள்ள இடம் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பிளாட்டுகளாக மாறிவிட்டது. தற்போது மழை நீர்வரத்து ஓடையும் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் ஊருணிகள் நிறைந்து தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளது. ஊருணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தும் நகராட்சியும் வருவாய்த்துறையும் அலட்சியமாக உள்ளனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதை அகற்றாமல் மெத்தனமாக உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற வேண்டும்.