/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்நிலைகள் செழிப்பு, கால்நடை தீவனங்களுக்கு சிக்கல்
/
நீர்நிலைகள் செழிப்பு, கால்நடை தீவனங்களுக்கு சிக்கல்
நீர்நிலைகள் செழிப்பு, கால்நடை தீவனங்களுக்கு சிக்கல்
நீர்நிலைகள் செழிப்பு, கால்நடை தீவனங்களுக்கு சிக்கல்
ADDED : ஜன 30, 2025 04:56 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் தாலுகா பகுதியில் நீர்நிலைகள் செழிப்பால் கால்நடைகளுக்கான தீவனப் பயிர் பற்றாக்குறை சிக்கலை சந்திக்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதி நீர் வளத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக நீர்நிலைகள் செழித்து உள்ளன. பாசனத்திற்கு தண்ணீர் சப்ளை ஆகும் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் சிறிய அளவிலான தண்ணீரை தேக்கி நிற்கும் குட்டைகள், ஊருணிகள் நீர் தேக்கங்களில் பெரும்பாலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
ராஜபாளையம், சேத்துார், தேவதானம், முகவூர் சுற்றுப்பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இவற்றை தரிசு நிலங்கள் கண்மாய்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு மழை பொழிவு உள்ளதால் நீர்நிலைகள் ஓரளவு நிறைந்து காணப்படுகின்றன. இதனால் தரிசான பகுதிகளிலும் பாசனம் நடைபெற்று வருகின்றன. இதனால் தரிசு நிலங்கள் கண்மாயின் வறண்ட புல்வெளி பகுதிகள் குறைந்து மேய்ச்சலுக்கான கால்நடைகள் பசுந்தீவனத்திற்கான  பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மகேந்திரன்: கிடை மாடுகள், ஆடுகளை விவசாய உர பயன்பாட்டிற்கு தொழிலாக பயன்படுத்தி வருகிறோம். கால்நடைகளை தீவனத்திற்காக கிடை காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மலையை ஒட்டிய வனப்பகுதிகளிலும் தரிசு நிலங்கள், கண்மாய்களில் மேய்த்து வந்தோம்.
மலைப்பகுதிகளில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்மாய்களிலும் தற்போது நீர் காணப்படுவதுடன், பாசனமும் அதிகரித்துள்ளதால் தீவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிமார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்கி சமாளிக்க வேண்டியுள்ளது.

