ADDED : அக் 17, 2024 05:03 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புஞ்சை நிலங்களில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு பயிற்சி நடந்தது.
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பயிற்சி அளித்தனர்.
துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் ராஜாதலைமை வகித்தார். இணை இயக்குனர் இலக்குவ பூபதி சிறப்புரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் நீர் சேமிப்பு உத்திகள்குறித்து பேசினார்.
நிலையான மண்வளம், ஊட்டசத்து மேலாண்மை, நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தொழில் நுட்ப வல்லுநர்கள் கண்ணன், ஜெயச்சந்திரன், வசந்தா, வேணு தேவன், ஷீபா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கினர்.
உதவி பேராசிரியர் லீமாரோஸ் நன்றி கூறினார்.