/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி சீலம்பட்டியில் வீணாகும் குடிநீர்
/
நரிக்குடி சீலம்பட்டியில் வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 09, 2025 11:36 PM
நரிக்குடி: நரிக்குடி சீலம்பட்டியில் குடிநீர் வீணாகி வருவதால் சீராக சப்ளை இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நரிக்குடி இலுப்பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீலம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு குடிநீர் உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து சப்ளை செய்யப்பட்டது. நாளடைவில் சுவை மாறியதால் சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தினர். இதனை ஏற்று அக்கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
இதனை உள்ளூர் குடிநீருடன் கலந்து சப்ளை செய்ய அங்குள்ள மேல்நிலைத் தொட்டியில் நிரப்பப்பட்டு வருகிறது. சில நாட்களாக தண்ணீர் பற்றாக்குறையால் அக்கிராமத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேல்நிலைத் தொட்டி நிரம்பி, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. சீராக சப்ளை செய்வது கிடையாது. கண்டும் காணாமல் இருப்பதால் தண்ணீருக்காக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வீணாவதை தடுத்து சீராக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.