/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மார் 21, 2025 06:17 AM

சாத்துார் : சாத்துார் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் கோவில்பட்டி மெயின் ரோட்டில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் கிழக்கு பக்க ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோட்டின் ஓரத்தில் மக்கள் நடந்து செல்வதற்காக பேவர் ப்ளாக் கல் பதிக்கும் பணியும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடந்தது.
இதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய் உடைந்தது. பல மாதங்கள் ஆன நிலையிலும் இன்று வரை குழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை.மேலும் இதில் குடிநீர் கசிந்தபடி உள்ளது.
காலை நேரங்களில் குடிநீர் பகிர்மானம் செய்யும்போது அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கூறும் நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பு ஏற்பட்டதை உடனடியாக சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குழாய் உழைப்பை சரி செய்து இங்கு பேவர் பிளாக்கல் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.