ADDED : ஜூன் 20, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பகுதிகளில் குடிநீர் வினியோக இடைவெளி அதிகரித்து வரும் அதே நேரம் ஆங்காங்கே பைப்லைன் லீக் ஆவது தொடர்கதையாக உள்ளது.
நகர், ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோக இடைவெளி 10 முதல் 20 நாட்களாக உள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நேற்று தெப்பம் அருகே பைப்லைன் உடைந்து குடிநீர் வீணானது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோகம் ஆகும் நேரங்களில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக குடிநீர் வீணாகி வருகிறது. வெளியூர் நீராதாரம் என்பதால் அலட்சியமாக உள்ளதா என மக்கள் புலம்புகின்றனர். குடிநீர் வடிகால் வாரியம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.