/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் நீரை கபளீகரம் செய்யும் ஆகாயத்தாமரைகள்
/
ராஜபாளையத்தில் நீரை கபளீகரம் செய்யும் ஆகாயத்தாமரைகள்
ராஜபாளையத்தில் நீரை கபளீகரம் செய்யும் ஆகாயத்தாமரைகள்
ராஜபாளையத்தில் நீரை கபளீகரம் செய்யும் ஆகாயத்தாமரைகள்
ADDED : நவ 22, 2024 03:47 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதி சுற்றியுள்ள கண்மாய்களில் விவசாயத்திற்கு தேவையான பாசன நீரை ஆகாய தாமரை ஆக்கிரமித்து வேகமாக வற்றச் செய்வதால் அகற்றுவது குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் மலையொட்டிய பகுதிகளில் இருந்து உருவாகும் நீர் ஆதாரங்களின் மூலம் சுற்றுப்பகுதி கண்மாய்கள்முதல் மழைக்கு நீர் இருப்பை பெற்று விடும்.
இந்நிலையில் நகர் பகுதி ஒட்டி உள்ளதால் கண்மாய்களில் குடியிருப்புகளின் கழிவு நீர் என்று கலந்து விடுகிறது.
இதனால் கழிவு நீரில் வேகமாக வளரும் ஆகாய தாமரை செழித்து வளர்வதுடன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து வளர்ந்து விடுகிறது.
இதன் காரணமாக தண்ணீர் வரும்போது பாசனத்திற்கான கொள்ளளவு குறைந்து பாதிப்பு ஏற்படுத்துவதுடன் நீர்வற்றும் காலங்களில் மடைகள் வழியே பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற வழி இன்றி அடைப்பு ஏற்படுத்துகிறது.
இவற்றின் வளர்ச்சியால்தண்ணீரும் விரைவில் ஆவியாகி சூரிய ஒளி நீரில் படாமல் கண்மாய் நீரின் தன்மையும் மாற்றம் அடைந்து விடுகிறது.
ராஜபாளையம் சுற்றியுள்ள புளியங்குளம், பிரண்டை குளம், கடம்பன் குளம், பெரியாதி குளம், கொண்டனேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களும் நகரில் உள்ள ஊருணிகளும் பாதிப்பில் சிக்கி உள்ளன.
சமூக ஆர்வலர்கள் சிலரின் பங்களிப்பின் மூலம் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆகாய தாமரை அகற்றும் பணி நடைபெற்று மீண்டும் இவற்றின் வளர்ச்சி இருந்து வருகிறது.
விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வரும் ஆகாயத்தாமரையை நிரந்தரமாக அகற்றும் வழிமுறையை மேற்கொள்ள வேண்டி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.