/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் குழாய் உடைப்பு; 20 நாட்களாக வீணாகும் குடிநீர்
/
குடிநீர் குழாய் உடைப்பு; 20 நாட்களாக வீணாகும் குடிநீர்
குடிநீர் குழாய் உடைப்பு; 20 நாட்களாக வீணாகும் குடிநீர்
குடிநீர் குழாய் உடைப்பு; 20 நாட்களாக வீணாகும் குடிநீர்
ADDED : ஜன 15, 2024 11:01 PM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து 20 நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டு உள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வைகை, தாமிரபரணி திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் பெய்த கன மழையில் தாமரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், குடிநீர் மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வருவது தடைப்பட்டு போனது. தற்போது வைகை குடிநீரை வைத்துத்தான் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்பு பாளையம்பட்டி பகுதியில் வைகை குடிநீர் வரும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டு உள்ளது. குழாய் உழைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : தாமிரபரணி குடிநீர் தடைப்பட்டு போனதால் இருக்கின்ற வைகை குடிநீர் வைத்து தான் நகரில் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்வதற்கு வைகை குடிநீர் வினியோகத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதனால் நகரில் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடை பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு தான் இன்னும் சில நாட்களில் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. அது சமயம் வைகை குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய உள்ளோம் என்றனர்.