/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் குடிநீர் குழாய் உடைப்பு
/
சிவகாசியில் குடிநீர் குழாய் உடைப்பு
ADDED : ஏப் 04, 2025 06:12 AM

சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
சிவகாசி காந்திநகர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து ஆயில் மில் காலனி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்படுகின்றது.
ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் மாற்றுப்பாதையாக உள்ள ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அதிகளவில் வாகனங்கள்வந்து செல்கின்றன. குழாய் உடைந்து அதிகமாக தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

