/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீர்
/
மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீர்
ADDED : ஜன 15, 2024 11:06 PM

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா கொடிக்குளத்தில் மரத்தின் அடியில் சென்ற குடிநீர் குழாய் உடைந்து, மரத்தின் ஓட்டை வழியாக அருவிபோல் கொட்டியது, இது பார்ப்பவர்களுக்கு மரத்தில் இருந்து கொட்டுவது போல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கொடிக்குளம் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தண்ணீர் தொட்டி உள்ளது. அதற்கான குடிநீர் குழாய், ரோட்டோர மரத்தினை ஒட்டி செல்கிறது.
நேற்று காலை அக்குழாய் உடைந்து மரத்தின் பொந்து வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. இது திடீரென பார்ப்பவர்களுக்கு மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் இருந்தது.
இதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். இதனையடுத்து உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.